புதிதாக திறக்கப்பட்ட கோவையில் ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு..!!
Oct 13, 2025, 10:09 IST
கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட் வின்ஸ் பகுதிக்கு பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோரவிபத்தில் கார் லாரிக்கு அடியில் புகுந்து அப்பளம் போல் நொறுங்கியது.
நள்ளவிரல் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 1 மணி நேரம் போராடி லாரிக்கு அடியில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.