×

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு -  தமிழகத்திற்கு ரூ.5,769 கோடி விடுவிப்பு..

 

ஜி.எஸ்.டி. வரி பகிர்வு நிதியாக  தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரத்து 769 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடை ஈடு செய்ய, 5 ஆண்டு காலத்துக்கு ஜி.எஸ்.டி. வரி பகிர்வு  வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு அவ்வப்போது விடுவித்து வந்தது. அதன்படி,  ஜி.எஸ்.டி. வரி பகிர்வாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரத்து 318 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.

14-வது தவணையாக விடுவிக்கப்பட்டுள்ள இந்த தொகையில், தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரத்து 769 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.  மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை வேகப்படுத்தி, மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உறுதியின் அடிப்படையில் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ. 70 ஆயிரத்து 159 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், இந்த முறை இரண்டு மடங்காக மத்திய அரசு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.