☰
×

#BREAKING அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி குரூப் 4 தேர்வு   

 

மொத்தம் 6,574 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்.6 முதல் நவ.5 இரவு 11.59 மணி வரை நடைபெறும். குரூப்-4 தேர்வு ஜன.10, 2027 அன்று நடைபெறும். விண்ணப்பிக்க www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும். குரூப்-4 தேர்வுவுகள் 2027 ஜனவரி 10 அன்று காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும்.