நகைப் பிரியர்களுக்கு செம குட் நியூஸ்..!! 2 வாரத்தில் ரூ.11,240 குறைந்தது..!!
தங்கம் விலை தாறுமாறாக சரிந்து வருகிறது. இந்த ஆண்டில் முதன்முறையாக சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே சென்றது. இது நகைப்பிரியர்களுக்கு மிக மகிழ்ச்சியாக செய்தி தான் என்றாலும், இந்த விலை குறைவு தொடருமா என்றால் சந்தேகம் தான் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில், பங்குச்சந்தை, தங்கம் உள்ளிட்ட எந்த முதலீடாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றம் அல்லது இறக்கம் இருந்தால் அடுத்த சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு அதற்கு எதிர்மாறாக இருக்கும்.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வந்த நிலையில் தங்கத்தின் மீதான டிமாண்ட் அதிகரித்துக்கொண்டே போனது. கடந்த சில மாதங்களில் மத்திய வங்கிகள் மட்டும் 3 ஆயிரம் டன் தங்கம் வாங்கியிருக்கின்றன.
அதிலும் குறிப்பாக, சமீப காலமாக சீனா அதிகளவில் தங்கம் வாங்கியிருக்கிறது. இப்படி தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வந்த வேளையில் அமெரிக்க டாலர் மதிப்பு கூடியதால், அதிக லாபம் தருகிற பங்குச்சந்தைகள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கின்றனர். இதனால் தங்கம் விலை சரிந்து வருகிறது.
எனினும், அமெரிக்க ஃபெடரல் வங்கி அடுத்து வட்டி விகிதத்தை உயர்த்துமா? அல்லது இதே நிலையில் நீடிக்குமா? என்பதை பொறுத்தே தங்கத்தின் விலை சரியுமா? அல்லது கூடுமா? என்பது தெரியும். எனவே, தங்கம் வாங்க நினைப்போர் தாமதிக்காமல் இந்த மாதத்திற்குள் வாங்குவது நல்லது என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.
இன்று (நவம்பர் 19) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கு விற்பனையாகிறது.
கடநத் 2 வாரஙக்ளில் 11,240 ரூபாய் குறைந்துள்ளது தஙக்ம் விலை.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.180-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,80,000-க்கு விற்பனையாகிறது.