×

உள்ளே நீட் தேர்வு எழுதும் பேத்தி... வெளியே  ஸ்ரீராம ஜெயம் எழுதிய பாட்டி!

 

பேத்திக்காக நீட் தேர்வு மைய வாயிலில் அமர்ந்து மூதாட்டி ஒருவர் ஸ்ரீராமஜெயம் எழுதி வருகிறார்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. கோவையைப் பொறுத்தவரை 16 மையங்களில் இந்த தேர்வை 7,181 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்க உள்ள நிலையில் காலை முதலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லி மையத்திற்குள்ளே அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி விமலா என்பவர் தனது பேத்தி ஜோஷனாவுக்காக தேர்வு மைய வாயிலில் அமர்ந்து ஸ்ரீராமஜெயம் எழுதி வருகிறார். இதுகுறித்து மூதாட்டி விமலா கூறுகையில், எனது பேத்தி இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதுகிறார். அவர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இங்கு அமர்ந்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வருகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. கடந்த முறையும் பேத்திக்காக இதேபோல் அவர் தேர்வு மையத்திற்குள்ளே சென்றது முதல் வெளியே வரும் வரை ஸ்ரீ ராம ஜெயம் எழுதினேன்". என்றார்.