×

‘இரண்டாவதும் பெண் குழந்தை..’ பிறந்த 14 மணி நேரத்தில் கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி

 

ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் மருத்துவமனையில் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது செய்யப்பட்டார்.


ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் மருத்துவமனையில் பிறந்த 14 மணி நேரத்தில் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து குழந்தைக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டது தெரிய வந்த நிலையில் காவல்துறை விசாரணையில் பாட்டி தங்கமணி (47) சிக்கினார். இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையின் கழுத்து, மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைது நடவடிக்கையை தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.