×

தாத்தா சத்யராஜ், அப்பா சிபிராஜை மிஞ்சிய பேரன்! சர்வதேச அளவில் தங்கம் வென்று செம கெத்து காட்டிய தீரன்!

 

நடிகர் சிபி சத்யராஜின் மகன் தீரன், மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ISSO விளையாட்டுப் போட்டிகளின் டேக்வாண்டோ பிரிவில் தங்கம் வென்று சாதனை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் பேரனும், நடிகர் சிபிராஜின் மூத்த மகனுமான தீரன், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்!

மும்பையில் உள்ள புகழ்பெற்ற 'திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில்' (Dhirubhai Ambani International School) நடைபெற்ற 'ISSO Games 2026-27' சர்வதேச டேக்வாண்டோ (Taekwondo) போட்டியில், தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற தீரன், களத்தில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி எதிராளிகளை வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் தட்டிப்பறித்துள்ளார்.

தன் மகன் தங்கப் பதக்கத்துடன் நிற்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள தந்தை சிபிராஜ், "என் மகன் தீரன் தங்கப் பதக்கம் வென்ற செய்தியைப் பகிர்வதில் அளப்பரிய மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த மகத்தான சாதனையைச் சாத்தியமாக்கிய பயிற்றுநர் திரு. தயா லீ அவர்களுக்கும், வாய்ப்பளித்து ஊக்குவித்த எங்களது சிவ நாடார் பள்ளி நிர்வாகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!" என மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ரேவதி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சிபிராஜ் - ரேவதி தம்பதியருக்குத் தீரன் மற்றும் சமரன் என இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்தில் தாத்தா சத்யராஜ் மற்றும் அப்பா சிபிராஜ் என இரு தலைமுறைகளாகத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்து வரும் நிலையில், மூன்றாவது தலைமுறைப் பேரனான குட்டி தீரன் விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இச்செய்தியைக் கண்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் குட்டி சாம்பியன் தீரனுக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக 'டென் ஹவர்ஸ்' படத்தில் நடித்திருந்த நடிகர் சிபிராஜ், தற்போது தனது தந்தை சத்யராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை: தி செகண்ட் சேப்டர்' (Jackson Durai: The 2nd Chapter) திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



 

Happy and proud to share that my son #Dheeran , has won the Gold medal in the ISSO Games 2026-27
Taekwondo tournament held at Dhirubhai Ambani International School in Mumbai.
Sincere thanks to his coach #Udhayakmar sir of #TamilNaduTaekwondoAcademy for making this possible and… pic.twitter.com/1KUJvDtl9G

— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) September 20, 2026