×

சென்னைஸ் அமிர்தாவில் பிரமாண்ட பட்டமளிப்பு விழா- 800 மாணவர்கள் பட்டங்கள் வாங்கி மகிழ்ச்சி

 

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், அண்மையில் (24 ஜூன் 2026) பட்டமளிப்பு விழாவினை சென்னையில் நடத்தியது. இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர பேராசிரியர் G. ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 800 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் தனது உரையில், இன்றைய உலகளாவிய பொருளாதார சூழலில் தொடர் கற்றல், புதுமை, ஒழுக்கமான தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.

சென்னைஸ் அமிர்தா மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்வி ஒத்துழைப்பின் கீழ் நடத்தப்படும் பி.எஸ்.சி. கேட்டரிங் அண்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் (Catering and Hotel Administration), டிப்ளமோ இன் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் (Diploma in Hotel Administration), பி.எஸ்.சி. லேட்டரல் என்ட்ரி (Lateral Entry) மற்றும் எம்.பி.ஏ. இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட்  (MBA in Hotel Management) உள்ளிட்ட படிப்புகளில் பயின்ற மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். நிகழ்வில் பேசிய சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. ஆர். பூமிநாதன், பட்டம் பெறுவது என்பது கல்வியின் முடிவல்ல. மாறாக வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றல், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை சிறப்பிற்கான புதிய தொடக்கம் எனக் குறிப்பிட்டார். மேலும், சென்னை, செங்கல்பட்டு, பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, கொச்சி மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் செயல்பட்டு வரும் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம், ஹோட்டல் மேனேஜ்மென்ட் (Hotel Management), ஏவியேஷன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் (Aviation and Airport Management), நர்சிங் அண்ட் அலைட் ஹெல்த் சயின்சஸ் (Nursing and Allied Health Sciences) மற்றும் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் (Logistics and Supply Chain Management) உள்ளிட்ட துறைகளில் வேலை மற்றும் தொழில் வாய்ப்பு மையப்படுத்தப்பட்ட கல்வியை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை 31,651 தேசிய மற்றும் சர்வதேச வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள சென்னைஸ் அமிர்தா, இந்தியா, ஐரோப்பா, மாலத்தீவு, மொரீஷியஸ் மத்திய கிழக்கு - தென்கிழக்கு ஆசிய நாடுகள்  உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்வதற்கு வழிவகுத்துள்ளது.மலேசிய ஹோட்டல்கள் சங்கத்துடன் (Malaysian Association of Hotels) சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அச்சங்கத்தின் கீழ் உள்ள 1100 மலேசிய ஹோட்டல்களில் பணியாற்றும் வாய்ப்பு 'சென்னைஸ் அமிர்தா' (Chennais Amirta) மாணவர்களுக்குக் கிடைக்கும்.  இந்நிகழ்வில் சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைமை இயக்க அலுவலர் திருமதி பானுமதி, டீன் திரு. சுரேன், முதன்மை கல்வி ஆலோசகர் திரு. பால் மற்றும் நர்சிங், பெங்களூரு, பால்கம்பேட், விஜயவாடா மற்றும் ஏவியேஷன் கல்லூரிகளின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.