×

40 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்த பிரம்மாண்ட சகோதரர்கள்

பிரம்மாண்ட சகோதரர்கள் என்றும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றும் அழைக்கப்படும் எம். ஆர். கணேஷ், எம்.ஆர். சாமிநாதன் ஆகிய இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி 40 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் எம். ஆர். கணேஷ், எம். ஆர். சுவாமிநாதன். இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம்செலுத்தினால் பணம் திரும்ப இரட்டிப்பாக கொடுக்கப்படும் என்று ஆசைகாட்டி, உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். இதற்காக 15க்கும்
 

பிரம்மாண்ட சகோதரர்கள் என்றும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றும் அழைக்கப்படும் எம். ஆர். கணேஷ், எம்.ஆர். சாமிநாதன் ஆகிய இருவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி 40 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் எம். ஆர். கணேஷ், எம். ஆர். சுவாமிநாதன். இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம்செலுத்தினால் பணம் திரும்ப இரட்டிப்பாக கொடுக்கப்படும் என்று ஆசைகாட்டி, உறுப்பினர்களை சேர்த்துள்ளனர். இதற்காக 15க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை வைத்துள்ளனர்.

பணத்தை திருப்பி கேட்டவர்களை அடியாட்களை வைத்து விரட்டி அடித்து வந்துள்ளனர். இவர்களிடம் பணத்தை பறிகொடுத்த ஜபருல்லா – பைரோஜ் பானு தம்பதியினர் கடந்த ஜூலை 13ஆம் தேதி அப்போதைய மாவட்ட எஸ்பியிடம் நேரில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சகோதரர்கள் இருவரும் தலைமறைவாக இருந்தார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தன்பட்டியில் இருக்கும் பண்ணை வீட்டில் இருவரும் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி போலீசார் அந்த பண்ணை வீட்டை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர். மேலும் எம். ஆர். கணேஷ் மனைவி அகிலாண்டம், மைத்துனர் ராமச்சந்திரன், அலுவலக மேலாளர் ஸ்ரீகாந்த், உதவி மேலாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரகுநாதன்(70), குடும்பத்துடன் தலைமறைவாக இருந்து வருகிறார்.

பிரம்மாண்ட சகோதரர்கள் இருவரும் தங்களை ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இவை தவிர இன்னும் நூல் 15 வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்படாமல் இருக்கிறது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சகோதரர்கள் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக 40 ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

4 வயது குழந்தையை வேலைக்கார பெண் பராமரித்து வருவதாக சொல்லி பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் குழந்தை தவித்து வருவதாகவும் சொல்லி தனக்கும் ஜாமீன் கேட்டிருக்கிறார் அகிலாண்டம்.