☰
×

#BREAKING தமிழகம் முழுவதும் நவ.1 அன்று மெகா கிராம சபைக் கூட்டம்

 

வருகிற 1.11.2026 அன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மிகச் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  ஆணையர் அமுதவல்லி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, வருகிற 1.11.2026 அன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, 01.11.2026 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள  சுற்றறிக்கையில், "குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கூட்டம் நடத்தப்பட வேண்டும். கூட்டத்தில் அதாவது MGNREGS, தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய பொருள்களும் விவாதிக்கப்பட உள்ளன. தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வழிபாட்டுத் தலத்திலும் நடத்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். இது தமிழக அரசின் மதச்சார்பற்ற, வெளிப்படையான நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மேலும், 01.11.2026 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும், கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி (Namma Grama Sabhai Mobile App) மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை 01.11.2026 அன்றே இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உங்கள் ஊராட்சியில் 100 நாள் வேலை, வீடு கட்டும் திட்டம், குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி என என்னென்ன வேலைகள் நடக்கிறது, எவ்வளவு நிதி வந்தது, எப்படி செலவு செய்யப்பட்டது என்பதை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. தமிழக அரசின் இந்த மிகச் சிறப்பான நடவடிக்கையால் கிராமப்புற மக்கள் அதிகாரத்தில் நேரடியாக பங்கேற்க முடியும். எனவே, 01.11.2026 காலை 11 மணிக்கு உங்கள் கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்