தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்.!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். இதில் கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப்பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். கிராமசபையின் ஒப்புதலுடன் பிற முக்கிய பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறையாக பதிவு செய்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக். 2) தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். "கிராமங்கள் வளர்ந்தால்தான் தமிழ்நாடு முழுமையாக வளரும் என்பதே தவெக அரசின் நோக்கம்; கிராம சபைக் கூட்டங்களை ஒரு திருவிழாவைப் போல மக்கள் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.