☰
×

நாளை முதல் கனிமவளம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு ஜி.பி.எஸ். கட்டாயம்..! 

 

கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ். பொருத்துவதற்கான அவகாசம் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜி.பி.எஸ். பொருத்துவதற்கான அவகாசம் இன்றுடன்(31-ந்தேதி) நிறைவடைகிறது.

எனவே, தமிழகத்தில் நாளை (நவம்பர் 1-ந்தேதி) முதல் AIS-140 தரத்திலான ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட லாரிகள் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், ஜி.பி.எஸ். பொருத்தாத வாகனங்களில் கருங்கற்கள், எம் சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது எனவும் சுரங்கத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இணையவழி இணைப்பும் கட்டாயம் என தெரிவித்துள்ள சுரங்கத்துறை இயக்குநர், ஜி.பி.எஸ். இல்லாத வாகனங்களுக்கு நாளை முதல் போக்குவரத்து அனுமதிச் சீட்டு வழங்கப்படாது என தெரிவித்துள்ளார். அதோடு ஜி.பி.எஸ். பொருத்தப்படாத வாகனங்களில் கனிம வளங்கள் ஏற்றப்படுவதாகப் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.