×

தாயகம் திரும்பும் இந்திய விஞ்ஞானிகளுக்கு ரூ.14 கோடி வரை நிதியுதவி: மத்திய அரசு புதிய திட்டம் அமல்!

 

அமெரிக்கா, ஐரோப்​பிய நாடு​களில் மருத்​து​வம், தொழில்நுட்​பம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இந்​திய வம்சாவளி​யினர் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றனர். அவர்​களது பங்களிப்பால் அந்​நிய நாடு​கள் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்தச் சூழலில் வெளி​நாடு​களில் பணி​யாற்​றும் இந்திய அறிவியல் அறிஞர்களும் தொழில்நுட்ப நிபுணர்​களும் மீண்​டும் தாய்​நாட்​டுக்குத் திரும்புவதற்காக ‘பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்​டம் 2026’ (பிஎம்​ஆர்​சி) என்ற முயற்சியை மத்​திய அரசு அண்​மை​யில் அறி​வித்​தது.

இந்தத் திட்​டத்​தின் கீழ் செயற்கை நுண்​ணறி​வு, கணினி சில்லு, எரிசக்​தி, இணையப் பாதுகாப்பு, மருத்​து​வம், உயிர்தொழில்​நுட்​பம், அரிய​வகை கனிமங்​கள், விண்​வெளி-​பாது​காப்​பு, தகவல் தொடர்பு, உற்​பத்​தி, வேளாண்​மை, மீன்வளம், அணுசக்தி ஆகிய 13 துறை​கள் சார்ந்த ஆராய்ச்சி திட்​டங்​களில் பங்​கேற்க வெளி​நாடு​வாழ் இந்​திய விஞ்​ஞானிகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்டு உள்​ளது. பிஎம்​ஆர்சி திட்​டத்​தில் இளம் ஆய்வாளருக்கு ரூ.4 கோடி வரை உதவித் தொகை வழங்​கப்​படும்.

மூத்த ஆய்வாளர்களுக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.14 கோடி வரை உதவித் தொகை அளிக்​கப்​படும்.

டெல்​லி, மும்​பை, சென்னை, கான்​பூர், ஹைத​ரா​பாத், தன்​பாத்​தில் உள்ள ஐஐடி கல்வி நிறு​வனங்​கள், பெங்​களூரு​வில் உள்ள ஐஐஎஸ்சி கல்வி நிறு​வனத்​தில் வெளி​நாடு​வாழ் இந்​திய விஞ்​ஞானிகள் தங்களது ஆராய்ச்​சிகளை மேற்​கொள்​ளலாம்.

பிஎம்​ஆர்சி திட்டத்தில் இணைய https://pmrc.education.gov.in/ என்ற இணை​யம் வாயிலாக வரும் ஜூலை 15ஆம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மத்​திய கல்​வி அமைச்​சு தெரிவித்துள்ளது.