×

‘அதிகரிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி’ நினைவாகும் மருத்துவக் கனவு!

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் இதுவரை 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழலில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவுகள் இந்த கருத்தை மாற்றி அமைத்திருக்கிறது என்றே கூறலாம்.
 

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்ச்சி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் இதுவரை 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழலில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு வெளியான நீட் தேர்வு முடிவுகள் இந்த கருத்தை மாற்றி அமைத்திருக்கிறது என்றே கூறலாம்.

தமிழக அரசின் 412 இலவச நீட் பயிற்சி மையங்களில் படித்த 1,615 மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு தமிழில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1,017 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 17,101 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வாசுகி என்ற மாணவி 580 மதிப்பெண்களும் சக்திவேல் 552 மதிப்பெண்களும் பெற்றனர். தனியார் பயிற்சி மையங்களில் படித்த, அரசு பள்ளி மாணவர்கள் ஜீவித்குமார் 644 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களால் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்ற நிலை தற்போது மாறியிருக்கிறது என்பது இதன் மூலமாக நிரூபனம் ஆகியுள்ளது. மேலும், 7.5 சதவீதி இட ஒதுக்கீடும் அமல்படுத்தப்பட்டால் அரசு பள்ளி மாணவர்களின் கனவு நினைவாகும் என்பதில் ஐயமில்லை. இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு, எதிர்காலத்தில் பல அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.