×

மெட்டாவுக்கு மத்திய அரசு உத்தரவு : போலி பதிவுகள், டீப்பேக் உள்ளடக்கங்களுக்கு...

 

மத்திய அரசுடன் நடந்த தொழில்நுட்பப் பேச்சுவார்த்தையில் மெட்டா அல்காரிதத்தில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது தளங்களில் உள்ள டீப்பேக்குகள், சட்டவிரோத போலி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க, மெட்டா நிறுவனம் தனது அல்காரிதம்களைப் புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளில் உள்ள விதிமீறல் விளம்பரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிழைகள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து நோட்டீஸ் மற்றும் சம்மன் வழங்கி வந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செயல்படும் அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அரசு, குறைபாடுகளைச் சரிசெய்ய விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் மெட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

டீப்பேக்குகள் உள்ளடக்கம், போலி பதிவுகளைக் கண்டறிந்து அகற்றும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அரசுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்றவும் மெட்டா நிறுவனத்தை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

போலி பதிவுகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அந்நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.