×

பஸ் ஸ்டிரைக் : போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை!

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் 9 தொழிற்சங்கத்தினர், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பாவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தும், போராட்டம் தொடருகிறது. தொழிலாளர்கள் பணிக்கு வராததால் மிக குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. பல இடங்களில் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கம் அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்காத ஒரு சில தொழிலாளர்கள் பணிக்கு வருவதால்,
 

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் 9 தொழிற்சங்கத்தினர், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பாவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தும், போராட்டம் தொடருகிறது. தொழிலாளர்கள் பணிக்கு வராததால் மிக குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

பல இடங்களில் தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கம் அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்காத ஒரு சில தொழிலாளர்கள் பணிக்கு வருவதால், அவர்களை வைத்து மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 3 நாட்களாக ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பேருந்துகள், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.