×

முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணம் நடத்த அனுமதி

தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை
 

தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே கோவில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இருப்பினும் தினசரி பூஜை கோவில்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எந்த தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த திருமணங்களை திட்டமிட்டப்படி நடத்திக்கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். அவர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட, பூஜையில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.