திருப்பதியில் “கோவிந்தா கோவிந்தா” என புத்தாண்டை வரவேற்று வழிபாடு!
Jan 1, 2026, 12:40 IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், தொடர் பள்ளி விடுமுறை காரணமாக கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு குவிந்திருந்த பக்தர்கள் ஆங்கில புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடினர். கோயில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கில வாழ்த்து கூறியும், கோவிந்தா, கோவிந்தா கோஷம் எழுப்பி ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். ஒரு சிலர் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்