×

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட் சட்டப்பேரவை கூட்டத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 4 நாட்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் 9 சட்டமசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் முக்கியமாக தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த மசோதா முதல் முறையாக கடந்த 2022 பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி, 'இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதியாண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல' என கடிதம் அனுப்பியிருந்தார். ஆளுநரின் கருத்துகளை தமிழக சட்டப்பேரவை நிராகத்தது. இதனைத் தொடர்ந்து  இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தவிர்த்து தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, தமிழ்நாடு கடல்சார் வாரிய திருத்த மசோதா, தமிழ்நாடு மின் நுகர்வு அல்ல விற்பனை மீதான வரி திருத்த மசோதா, தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா, தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட முன்வடிவு, தமிழ்நாடு நீக்கறவு செய்தல் இரண்டாம் சட்ட முடிவு, தமிழ்நாடு நிதி ஒதுக்க சட்ட மசோதா உள்ளிட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தவிர்த்து தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்முறைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.