×

“தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர், மக்களின் முதல்வர் கருணாநிதி” ஆளுநர் புகழாரம்

தமிழக சட்டமன்றத்தில் நூற்றாண்டு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “ அனைவருக்கும் மாலை வணக்கம். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்நாளில் இப்பேரவையில் நிலையான தடம்பதித்து சென்ற அனைத்து ஆன்றோர்களுக்கும் சான்றோர்களையும் உளப்பூர்வமாக வணங்குகிறேன். தமிழ்நாடு
 

தமிழக சட்டமன்றத்தில் நூற்றாண்டு மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழா சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “ அனைவருக்கும் மாலை வணக்கம். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்நாளில் இப்பேரவையில் நிலையான தடம்பதித்து சென்ற அனைத்து ஆன்றோர்களுக்கும் சான்றோர்களையும் உளப்பூர்வமாக வணங்குகிறேன். தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது கவுரவமாக உள்ளது. தொலை நோக்கு சிந்தனை கொண்ட தலைவர் கலைஞர் கருணாநிதி.

தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தரான கலைஞர் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளுடன் வாழ்ந்தவர் அண்ணா. தமிழ்நாடு சட்டமன்றம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 5 முறை முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப்பெற்றவர் கருணாநிதி. தமிழ் இலக்கியத்திலும் அவர் சிறந்த ஆளுமை கொண்டவர். எண்ணற்ற தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். லட்சக்கணக்கான மக்களின் மனங்களை கவர்ந்தவர். கைரிக்‌ஷா ஒழிப்பு உட்பட பல சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர். சாதி பாகுபாடுகள் களைய சமத்துவபுரம் கண்டவர் கலைஞர். இந்தியாவின் அனைத்து குடியரசு தலைவர்களுடனும் கலைஞர் அன்புடன் பழகினார். அனைத்து பிரதமர்களுடனும் நட்பு பாராட்டினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்குவ் வழிகாட்டியாக திகழ்ந்தவர்” என புகழாரம் சூட்டினார்.