பாலியல் வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த் 11ம் தேதி சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 18 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை வழங்க வழிவகை, பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர், அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.
.