#BREAKING அரசுப் பள்ளி சுவர் இடிந்து மாணவன் உயிரிழப்பு!
Dec 16, 2025, 14:44 IST
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தில் அரசு பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவர் உயிரிழந்தார். நடைமேடையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதால் அதை புதிதாகக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் எந்த அக்கறையும் காட்டாததன் விளைவே மாணவன் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.