×

ஆரணியில் அரசு பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா

 

ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியை உட்பட 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பள்ளி தலைமையாசிரியர் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது கொரோனா, ஓமிக்கிரான் அச்சுறுத்தல் காரணமாக 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டு 9முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நேற்று ஆரணி அரசு பெண்கள் மேல்நிலையப்பள்ளியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழு கொரோனா பரிசோனை மேற்கொண்டதில் 2 ஆசிரியை 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதனால் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டது.  நாளை முதல் பொங்கல் பண்டிகை விடுமுறையால் பள்ளி இழுத்து மூடப்பட்டன. ஆரணி அரசு பள்ளியில் ஆசிரியை உட்பட 20பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.