×

100% ஊழியர்களுடன் வாரத்தில் 5 நாட்கள் அரசு அலுவலங்கள் செயல்படும் – தமிழக அரசு

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் 100% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட விடுப்பு அளிக்கப்பட்டதால் வாரத்தின் 6 நாட்கள் வேலை என இருந்ததில் மாற்றம் செய்யப்பட்டு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் தலைமைச் செயலகம், கல்வி நிறுவனங்கள், மாவட்ட
 

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் 100% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட விடுப்பு அளிக்கப்பட்டதால் வாரத்தின் 6 நாட்கள் வேலை என இருந்ததில் மாற்றம் செய்யப்பட்டு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் தலைமைச் செயலகம், கல்வி நிறுவனங்கள், மாவட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பணிக்கு வரும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 50% ஊழியர்கள் மட்டுமே பணி புரிய வேண்டும் என்பதால் முன்பு அரசு அலுவலகங்களில் சுழற்சி முறை பயன்படுத்தப்பட்டது. தற்போது சுழற்சிமுறை பயன்படும் ரத்து செய்யப்பட்டுள்ளன.