×

புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

 

புதுச்சேரியில் அரசு அலுவலகங்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய வரும் 31ம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.