×

சாத்தான் குளம் காவல்துறை விசாரணையில் இறந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை

சாத்தான் குளத்தில் ஊரடங்கின் போது கடை திறந்திருந்தாகக் கூறி காவல் துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டனர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். ஆனால், அவர்களை காவல் துறையினர் விசாரித்த விதமே வேறாக இருந்தது. அதன் முடிவில் இருவரும் மரணம் அடைந்தனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் உடல்நலக்குறைவால்தான் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் அது உண்மையல்ல என்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கு தமிழகத்தின் பேச்சுப் பொருளானது மட்டுமல்லாது இந்திய அளவில் முக்கிய நபர்கள் இம்மரணங்கள் குறித்து
 

சாத்தான் குளத்தில் ஊரடங்கின் போது கடை திறந்திருந்தாகக் கூறி காவல் துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டனர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். ஆனால், அவர்களை காவல் துறையினர் விசாரித்த விதமே வேறாக இருந்தது. அதன் முடிவில் இருவரும் மரணம் அடைந்தனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் உடல்நலக்குறைவால்தான் என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனாலும் அது உண்மையல்ல என்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வழக்கு தமிழகத்தின் பேச்சுப் பொருளானது மட்டுமல்லாது இந்திய அளவில் முக்கிய நபர்கள் இம்மரணங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர். அதனால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இதனை விசாரிக்கச் சென்ற நீதிபதியையே மிரட்டும் தொனியில் நடந்துகொண்ட காவலர்கள் பற்றிய செய்திகளைப் படித்திருப்போம்.

காவல் துறை விசாரணையில் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்ப்பில் பத்து லட்சம் ரூபாய் தொகை நிவாரணமாக அளிக்கப்பட்டது. மேலும் இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று ஜெயராஜ் மகள் பெர்சிக்கு இன்று இளநிலை வருவாய் ஆய்வாளர் அரசு வேலை அளிக்கப்பட்டது. வேலைக்கான நியமன ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரிசியிடம் வழங்கினார்.

தனக்கான வேலை ஆணையைப் பெற்ற பெர்சி, வழக்கு முறையாக நடத்தப்பட்டு உரிய நீதி கிடைக்கும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.