×

கொரோனா நோயாளிக்கு காய்ச்சல் இல்லை என்று திருப்பி அனுப்பிய அரசு மருத்துவமனை! – பிரபல மருத்துவர் வேதனை

தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனை மறுத்து வேறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததாகவும் அங்கு அவருக்கு காய்ச்சலே இல்லை என்று வீட்டுக்கு அனுப்ப முயன்றதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நேற்று மதியம் தொலைபேசியில் எனக்கு நெருக்கமான இளம் பெண்ணின் தந்தை, அவளுக்கு ஒரு வாரக் காய்ச்சலுக்குப் பின் பரிசோதனையில் கொரோனா தொற்று
 

தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு மருத்துவமனை மறுத்து வேறு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்ததாகவும் அங்கு அவருக்கு காய்ச்சலே இல்லை என்று வீட்டுக்கு அனுப்ப முயன்றதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “நேற்று மதியம் தொலைபேசியில் எனக்கு நெருக்கமான இளம் பெண்ணின் தந்தை, அவளுக்கு ஒரு வாரக் காய்ச்சலுக்குப் பின் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகச் சொன்னார். மேலும் வடபழனி அருகிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 60,000 ஆகும் என்று சொன்னார்கள் எனவும் கூறினார்.


நான் நம்பும் சென்னை அரசு பொதுமருத்துவ மனைக்கு (RGGH) அவளை அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தேன்.
இரவு அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்க தொடர்பு கொண்டால் அவளே தொலைபேசியில் –
மதியம் அரசு பொது மருத்துவமனை சென்றால், இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பின், இது எங்கள் zoneல் வராது, kmc போகச் சொன்னார்கள்,
அங்கே ஒரு மணி நேரம் கழித்து இப்போது காய்ச்சல் இல்லை, வீட்டுக்குப் போகலாம், நாளை மாநகராட்சியிலிருந்து வந்து ஏதாவது quarantine கூட்டிப் போவார்கள் என்றார்கள்.
allowfullscreen
அருகில் உள்ள வேறொரு மருத்துவமனையில் ஒரு நாள் கட்டணம் 15,000 என்று சொன்னதால் அங்கே சேர முடிவு செய்ததாகச் சொன்னாள்.
பரிசோதனையில் தொற்று என்றால் வீட்டில் இருந்து மற்றவர்க்கும் தொற்று வரலாம், மருத்துவமனைக்குப் போ என்று நான் தான் சொன்னேன்.
அவள் அப்படி அநாயாசமாகச் செலவழிக்கக் கூடிய பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவளும் அல்ல.


இப்படி எத்தனை பேர் இருக்கிறார்களோ..
இனி யாராவது என்னிடம் தொற்று இருக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டால் எங்கே அனுப்புவது என்று தெரியவில்லை.
அதே போல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்க என்ன மண்டலக் கட்டுப்பாடு என்பதும் புரியவில்லை.
எந்த மண்டலத்துக்கு எந்த மருத்துவமனை போக வேண்டும் என்று மாநகராட்சி/ சுகாதாரத்துறை மக்களிடம் சொல்வது இப்போது அவசரம், அவசியம்” என்று கூறியுள்ளார்.