☰
×

அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் கட்டாயம் - தலைமைச் செயலாளர் உத்தரவு

 

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31-க்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் Dr.M.சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். Letter No.5568/A1/2026-1, நாள் 05.08.2026-ன்படி, நிலம், வீடு, வாகனம், நகை, வங்கி சேமிப்பு மற்றும் கடன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் Form-I, II, III-ல் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு பட்டியலில் பெயர் இடம்பெறும். தவறினால் நன்னடத்தை விதியை மீறியதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே இனி பதவி உயர்வு என்றும் கூறப்பட்டுள்ளது. வேறு யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்து வாங்கியிருந்தாலும் அதனையும் குறிப்பிட்டு பதிவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேறு ஒருவர் பெயரில் சொத்து வாங்கியிருந்தால், அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.