×

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர அனுமதி.. வலுக்கும் கண்டனம்..

 


மத்திய அரசு பணியாளர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கையில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.. 

அரசு பணியில் இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுபினர்களாக இருக்கக்கூடாது என்பது முக்கிய விதியாக உள்ளது. அதன்படியே மத்திய மாநில  அரசுகள் மற்றும் பொது நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.  அத்துடன் மத்திய அரசு பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து பணியாற்ற தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை  வெளிப்படுத்தியுள்ள மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் , மத்திய அரசு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சு.வெ., “மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இப்பொழுது மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என  குறிப்பிட்டுள்ளார்.