×

"அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வர வேண்டும்"- சுகாதாரத்துறை

 

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தகுந்த நேரத்தில் பணிக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும். மருத்துவ சிகிச்சை தர தகுதியற்றோரை பயன்படுத்தினால் மருத்துவர்கள் மீது துறைசார் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும். மருத்துவ அதிகாரியான RMO காலை 7 மணி முதல் மருத்துவமனை செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவ படிப்போ, செவிலியர் பயிற்சியோ பெறாத தூய்மை பணியாளர்கள் சிகிச்சையளிக்க, ஊசி போடக்கூடாது. சிகிச்சைக்கு தகுதியற்ற நபர்களை பயன்படுத்தும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை 7.30 மணி- பிற்பகல் 12 மணி வரை நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவர்கல் பணியில் இருக்க வேண்டும். உள்நோயாளிகள் பிரிவை கண்காணிக்க மருத்துவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது