ஆற்றில் கவிழ்ந்த அரசுப் பேருந்து - 30 பயணிகள் படுகாயம்
Sep 13, 2026, 15:18 IST
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் அருகே ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் வேட்டைக்காரன்குளம் அருகே அரசு பேருந்து ஆற்றில் 10 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பயணிகள் பேருந்தில் பயணித்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 17 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவருக்கும் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விபத்து குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.