#BREAKING அமைச்சர்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு
தமிழக அமைச்சர்கள் தங்க சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 22 தமிழக அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் அருண் ராஜ்க்கு முல்லை இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஸ்ரீநாத்க்கு தாமிரபரணி இல்லமும், அமைச்சர் வன்னிஅரசுக்கு சாமந்தி இல்லமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் காந்திராஜ்க்கு சிறுவானி இல்லம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
செவ்வந்தி என அழைக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்து வந்த இபிஎஸ், சென்னை ராயப்பேட்டையில் புதிய வீட்டுக்கு குடி பெயர உள்ளதாகவும், இன்று அப்புதிய வீட்டில் பால் காய்ச்சும் நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.