அரசின் வரவு - செலவு கணக்கு வெளியீடு
Updated: Sep 20, 2026, 10:10 IST
2026–27ஆம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாத இறுதி வரை தமிழ்நாடு அரசின் மொத்த செலவினம் ரூ.1,47,839.35 கோடியாக உள்ளது.
2026–27ஆம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாத இறுதி வரை தமிழ்நாடு அரசின் மொத்த செலவினம் ரூ.1,47,839.35 கோடியாக உள்ளது. அரசின் வருவாய் செலவினம் ரூ.1,38,140.12 கோடியாக இருப்பதால் நிதி பற்றாக்குறை ரூ.47,113.05 கோடியாக உள்ளதாகவும், முதன்மை பற்றாக்குறை ரூ.2,680,33 கோடியாக உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஏப்ரல் - ஆகஸ்டு வரை தமிழக அரசின் வருவாய் ரூ.1.17 லட்சம் கோடி எனவும், செலவு ரூ.1.38 லட்சம் கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.20,349 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ.30,021 கோடி கடன் பெற்றுள்ளது.