அன்பு அக்கா த்ரிஷாவுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நற்பணி மன்றம்
Aug 3, 2026, 15:52 IST
மதுரையில் முதன்முறையாக த்ரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு மன்றம் சார்பில் மாவட்ட முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
மதுரை மாவட்ட த்ரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் மதுரை நகர் முழுவதும் விசித்திரமான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் 'எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை, தமிழக சங்க வரலாற்றில் முதல்முறையாக அன்பு அக்கா த்ரிஷாவிற்குத் தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு பதிவுத்துறை மூலம் சங்கம் பதிவு செய்யப்பட்டதை (பதிவு எண்: 53/2026), 'அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்' எனச் சுவரொட்டியில் குறிப்பிட்டுப் ரசிகர்கள் செய்துள்ள இந்த விளம்பரம் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.