கள் இறக்க அரசு அனுமதி- சட்டப்பேரவையில் அறிவிக்கிறார் முதல்வர் விஜய்?
Jul 27, 2026, 21:40 IST
கள் இறக்க அரசு அனுமதி இருப்பதாகவும், இத்தகவலை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கள் என்பது ஒரு விவசாய உற்பத்திப் பொருள் மற்றும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் இயற்கை பானம் என்பதால் இதற்கு தடை விதிக்கக் கூடாது என கள் இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் கள் இறக்க அனுமதி உள்ளது போல, தமிழகத்திலும் அனுமதித்தால் பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கள் இறக்க அனுமதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் வெளியிடுகிறார். பல ஆண்டுகள் கோரிக்கை நிறைவேறிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.