யூடியூபர் முக்தார், திருச்சி சூர்யா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!
Jun 17, 2026, 08:00 IST
வேலுார் மாவட்டம், சத்துவாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முக்தார் அகமது, 48; 'மை இந்தியா' என்ற 'யூ டியூப்' சேனல் நடத்தி வருகிறார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி அலிசா அப்துல்லா குறித்து, அவதுாறாகவும், அவரது இரட்டை குழந்தைகளை இழிவுப்படுத்தியும், திருச்சி சூர்யா என்பவருடன் சேர்ந்து, 'வீடியோ' வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது.இதுகுறித்து, அலிசா அப்துல்லா அளித்த புகாரின்படி, சென்னை சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, முதலில் திருச்சி சூர்யா, 33, முக்தார் அகமது, 48, ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் இருவர் மீதும், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.