☰
×

'கூகுள் ஜெமினி' AI தொழில்நுட்பத்தில் 'கால் பார் மீ' எனப்படும் புதிய வசதி அறிமுகம்..!!

 

 'வாட்ஸாப்', 'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். இருப்பினும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சர்வீஸ் செய்வதற்கு, உணவகத்தில் மேஜை முன்பதிவு செய்வதற்கு, புதிய பொருட்கள் வாங்க விரும்பினால் விலை விபரங்கள் கோருவதற்கு மொபைல் போனில் பேச வேண்டி உள்ளது.

இதுபோன்ற சூழல்களில், பயனர்களுக்கு பதிலாக கூகுளின் 'ஜெமினி' ஏ.ஐ., போன் செய்யும் வகையில் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், மொபைல் போனில் உள்ள 'ஜெமினி' செயலியில், '@கால் பார் மீ' என ஆங்கிலத்தில் டைப் செய்து அழைக்க வேண்டிய மொபைல் எண் உள்ளிட்ட தேவையான தகவல்களை பதிவிட வேண்டும்.

உதாரணமாக, குறிப்பிட்ட உணவகத்தில் நாளை இரவு 7:00 மணிக்கு இரண்டு பேருக்கு மேஜையை முன்பதிவு செய்யும்படி 'ஜெமினி'யிடம் தெரிவிக்கலாம். போன் செய்வதற்கு முன், எந்த எண்ணை தொடர்பு கொள்ளப் போகிறது, என்ன தகவல்களை தெரிவிக்க உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களின் சுருக்கத்தை 'ஜெமினி' வழங்கும். அதை பயனர்கள் சரிபார்த்து போன் செய்ய அனுமதி அளித்தால் போதும்.

அதன்பின், நிறுவனத்தை 'ஜெமினி' தொடர்பு கொள்ளும். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, நமக்காக பேசி தகவல்களை பெற்றுத்தரும். எந்த நேரத்திலும் போனை ரத்து செய்யவோ, தாங்களே பேசும் வகையில் போனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளவோ முடியும்.

தற்போது இது சோதனை அடிப்படையில் அமெரிக்காவில் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது