காலையிலேயே குட் நியூஸ் சொன்ன தங்கம்...! மளமளவென குறைந்தது..!
Nov 4, 2025, 09:58 IST
வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்திருந்தது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350-க்கு விற்பனையாகிறது. அதேசமயம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.168-க்கும், கிலோ ரூ.2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.165க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
04.11.2025 ஒரு சவரன் ரூ.90,000 (இன்று)
03.11.2025 ஒரு சவரன் ரூ.90,800 (நேற்று)
02.11.2025 ஒரு சவரன் ரூ.90,480
01.11.2025 ஒரு சவரன் ரூ.90,480
31.10.2025 ஒரு சவரன் ரூ.90,400
30.10.2025 ஒரு சவரன் ரூ.90,400