காலையில் வந்த குட் நியூஸ்..!!தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..!!
போர் காலங்களில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாக்கும் நோக்கில் தங்கத்தின் மீது முதலீடு செய்வர். இதனால் தங்கம் விலை அதிகரிக்கும். ஆனால் கடந்த பிப்ரவரி இறுதியில் மூண்ட அமெரிக்கா - ஈரான் இடையேயான போரானது இந்த கருத்தை மாற்றியமைத்தது.
மார்ச் மாதத்திலிருந்து தங்கம் விலை சரசரவென சரிந்தது. இதனால் குறைந்த அளவில் தங்கம் வாங்குகிற நகை வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். கச்சா எண்ணெய் கொள்முதல், டாலர் மதிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தற்போதைக்கு உயர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறிவந்தனர்.
ஆனால் வட்டி விகிதம் குறித்த அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முக்கிய முடிவானது உலகளாவிய தங்கம் வர்த்தகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக குறைந்து விற்பனையாகிறது.
நேற்று இரண்டு முறை தங்கம் விலை குறைந்து ரூ.1,17,800க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கு விற்கப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 குறைத்து ரூ.14,650க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ.2,60,000க்கு விற்கப்படுகிறது.