காலையில் வந்த குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
தங்கத்தை போல, வெள்ளி விலையும் நேற்று குறைந்தது.
நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ. 2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.11,400க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1, 120 குறைந்து ரூ.91,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ. 170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.