காலையிலேயே வந்த குட் நியூஸ்..!!தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைந்தது..!!
சர்வதேச விலை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க - ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் காரணமாக தங்கம் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் மேற்கொள்ள அவ்வப்போது சுமூகப் பேச்சுவார்த்தை எட்டப்பட்டு வந்தது. ஆனால், பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், இந்த பாதிப்பு சர்வதேச அளவில் பொருளாதார நிலையில் மாற்றம் கண்டு வருகிறது.
எரிபொருள் விநியோகம், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் இறக்கம் காரணமாக, தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் வெளியாகியுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,240 சரிந்துள்ளது. நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.106,960-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.105,720-க்கும் விற்பனையாகிறது.
அதே போல் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்துக்கு 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.