×

குட் நியூஸ்.. ஒரே நாளில் 2வது முறையாக குறைந்த தங்கம் விலை.. அதுவும் இவ்வளவா..!  

 

தங்கம் விலையை பொறுத்தவரையில் கடந்த 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.600-ம், சவரனுக்கு ரூ.4,800-ம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை தாண்டியது.

தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் குறைந்து வந்த நிலையில், கடந்த 10-ந் தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10,000-ம் எகிறி, ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840-க்கும், சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ.94ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த நிலையில், இன்று 2-வது முறையாக பிற்பகலில் மீண்டும் குறைந்துள்ளது.அதன்படி, கிராமுக்கு மீண்டும் ரூ.165 குறைந்து ரூ.11,675க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.93,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் ரூ.2,400 விலை உயர்ந்த தங்கம், இன்று ஒரே நாளில் ரூ.1,800 விலை குறைந்துள்ளது.