×

பெண்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்... வீட்டில் தோட்டம் போட ரூ. 10 கோடி நிதி..!

 

'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்ற பெயரில் இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

இல்லத்தரசிகள் வீட்டில் தோட்டம் அமைக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.வீட்டு தோட்டங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி நச்சு தன்மையற்ற பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுவதால் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதிப்படுத்துவது உடன் சுற்றுச் சூழல் மாசுபடுவதும் குறைகிறது.

எனவே நகர்புறங்களில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும், கிராமப்புறங்களில் வீட்டை சுற்றி உள்ள நிலப்பகுதிகளிலும் செடி வளர்ப்பு பைகளுடன் கூடிய தொகுப்புகள், செங்குத்து தோட்டம் மற்றும் நீரியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகை செடிகள் போன்றவற்றை வளர்த்து மன மலர்ச்சியையும் நலமான சூழலையும் ஏற்படுத்த ’வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டம்’ நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதியில் இருந்து செயல்படுத்தப்படும்.