ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்... 20% கட்டணச் சலுகை
Aug 11, 2025, 19:11 IST
பண்டிகைக் கால பயணம் செய்யும் பொதுமக்களின் டிக்கெட் கட்டணச் சுமையை குறைக்கும் வகையில் 20% கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது ரயில்வே.
பண்டிகைக் கால பயணம் செய்யும் பொதுமக்களின் டிக்கெட் கட்டணச் சுமையை குறைக்கும் வகையில் 20% கட்டணச் சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. அக்.13 முதல் 26 வரை பயணம் செய்யும் பயணிகள் நவ.17 முதல் டிச.1 வரை அதே ரயிலில் ஊர் திரும்ப டிக்கெட் பதிவு செய்தால், ரிட்டன் டிக்கெட்டில் 20% தள்ளுபடி பெறலாம். ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் இச்சலுகை கிடையாது எனவும். இந்த திட்டத்தில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுக்கான பணம் திருப்பி தரப்படமாட்டாது என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.