×

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்..! ரயில் ஒன் செயலியில் கட்டண சலுகை நீட்டிப்பு..!

 

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு சேவைகளை, 'ஆன்லைனில்' பெறும் வகையில், 'ரயில் ஒன்' செயலி, கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. இதுவரை 2.57 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். தினமும் 7.64 லட்சம் டிக்கெட்டுகள், இந்த செயலி வாயிலாக எடுக்கப்படுகின்றன. 

ரயில் முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், நடைமேடை டிக்கெட், பி.என்.ஆர்., ஸ்டேட்டஸ், ரயில் எங்கு வருகிறது என்பது உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகளை, இந்த செயலி வாயிலாக பெற முடியும். செயலியில் 'டிக்கெட்' எடுக்கும்போது, 3 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. பயணியரை ஊக்குவிக்கும் வகையில், இந்த சலுகை, வரும் 2027 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மூன்று சதவீதம், 'கேஸ்பேக்' சலுகை, 2028 ஆக., 24ம் தேதி வரை நீட்டித்து வழங்கப்பட உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Rail One செயலி மூலம் 'அன்-ரிசர்வ்டு' டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகள், பயணத்தின் போது தங்களின் மொபைலில் உள்ள செயலியை நேரடியாகத் திறந்து காண்பித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என இந்திய ரெயில்வே மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எவை ஏற்றுக்கொள்ளப்படாது:

*டிக்கெட்டுகளின் ஸ்கிரீன்ஷாட்டுகள்
*PDF வடிவங்கள்
*வாட்ஸ்அப் பார்வேர்டுகள்
ஆகியவை எக்காரணம் கொண்டும் பயணச் சீட்டாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


விதிமீறலுக்கு அபராதம்:


டிடிஇ பரிசோதனையின் போது போனில் செயலியை நேரடியாகக் காட்டாமல், ஸ்கிரீன்ஷாட்டோ அல்லது வாட்ஸ்அப் பார்வேர்டோ காண்பித்தால், அவர்கள் டிக்கெட் இல்லாத பயணிகளாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு ரெயில்வே விதிமுறைகளின்படி கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

ஏன் இந்த நடவடிக்கை?
ஒரே டிக்கெட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலருக்குப் பகிர்ந்து, ஒரே கட்டணத்தில் பல நபர்கள் பயணம் செய்யும் முறைகேடுகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளதால் இந்த கடுமையான விதியை ரெயில்வே அமல்படுத்தியுள்ளது.