×

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..! இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரம் சிற்பங்களை இலவசமாக பார்க்கலாம்..!! 

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவனால் செதுக்கப்பட்டன. எட்டாம் நுாற்றாண்டின் படைப்புகளான இவை இன்றும் பிரமிக்கும் அழகுடன் உள்ளன.இயல்பாகவும், நளினமாகவும், கலை நுணுக்கத்துடனும் படைக்கப்பட்ட இவற்றை, உலக பாரம்பரிய சின்னங்களாக, உலக கலாசார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. 

மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார அலுவலகம், இவற்றை பழமை மாறாமல் பராமரித்து, பாதுகாத்து வருகிறது.சுற்றுலா பயணியரிடம், நுழைவுக்கட்டணமாக, இந்தியருக்கு, தலா 40 ரூபாய், சர்வதேச நாட்டினருக்கு, தலா 600 ரூபாய் என, அத்துறை வசூலிக்கிறது.

இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இங்கு வரும் சுற்றுலா பயணியர் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.