×

பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கு வந்த நற்செய்தி!

 

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாதவர்கள் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ.3,000 உடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 97 சதவீதம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பரிசுத்தொகுப்பை பெறாதவர்கள் நாளை முதல் (ஜனவரி 19 ) பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள்ளது.  தமிழர் திருநாள் தைப்பொங்கல் பரிசு தொகுப்பு - 2026 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பொங்கல் தொகுப்பு வழங்கின.