×

தமிழக மக்களுக்கு செம நியூஸ்! புதிதாக உருவெடுக்கும் 20 தாலுகாக்கள்... 50 ஆக உயரும் மாவட்டங்கள்!

 

சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்தில், 26 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவை, 15 நாட்களில் வழங்கப்படுகின்றன. கடந்த 100 நாட்களில், 39.26 லட்சம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், பத்திரப்பதிவுக்கு விண்ணப்பித்ததும், 45 சதவீதம் பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசுப் பொருட்களை, கடந்த ஆட்சிகளில், வெளி மாநிலங்களில் இருந்து வாங்கினர். மேலும், 35 லட்சம் வேட்டி, சேலைகள் தேக்கமடைந்துள்ளன.மேட்டூர் அணையில் இருந்து, 20 ஆண்டுகளில் 8 முறை தான், ஜுன் 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது போதியளவு மழைப்பொழிவு இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பின், வறட்சி நிவாரணம் மற்றும் வறட்சி மாவட்டம் குறித்து குழு அமைத்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின், மாவட்டங்கள் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தவும், புதிதாக 20 தாலுகாக்கள் உருவாக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், இட நெருக்கடி உள்ள இடத்தில் செயல்படுகிறது. அதற்கு, 83 கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டப்படும். பேரிடர் சூழலை சமாளிக்க, மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்கூட்டியே 50 கோடி ரூபாய் வழங்கப்படும். விருந்தினர்கள், குழுக்கள், வெளிநாட்டை சார்ந்தவர்களுக்கான செலவுகளை, வருவாய் அலுவலர்கள் தான் பார்த்து வந்தனர். இதை மாவட்ட நிர்வாகம் ஏற்கும் வகையில், 6.85 கோடி ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.