×

புதுச்சேரி மக்களுக்கு செம்ம நியூஸ்! மாணவர்களுக்கு இலவச டேப், பெண்களுக்கு திருமண நிதி உயர்வு!

 

புதுச்சேரி சட்டப் பேரவையில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.24) தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

வீடு கட்டுவதற்கான நிதியுதவி உயர்வு

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,150 பயனாளிகளுக்கு ரூ.15.95 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2,500 பயனாளிகளுக்கு ரூ.29.15 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் மூலம் ஏழை மற்றும் மதிப்பெண்களில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளின் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டம், புகழ் பெற்ற பயிற்சி நிறுவனம் மூலம் இரண்டு மாத காலத்திற்குள் தொடங்கப்படும்.

கோடை உழவுக்கான நிதியுதவி

காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,500 வீதம் கோடை உழவுக்கான நிதியுதவி வழங்க வழங்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.13 கோடி செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் கன்றுகளுக்கு இலவச காப்பீடு

கன்றுக்கு ரூ.1,500 வீதம் 4 முதல் 8 மாத வயதுடைய அனைத்துப் பெண் கன்றுகளுக்கும் இலவச காப்பீடு வழங்கப்படும். கால்நடை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கால்நடை விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, புதுச்சேரி முழுவதும் மருத்துவ முகாம்கள் மற்றும் செல்லப் பிராணிகள் கண்காட்சிகள் நடத்தப்படும்.

புதுச்சேரி சட்டப் பேரவையில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.24) தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

வீடு கட்டுவதற்கான நிதியுதவி உயர்வு

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,150 பயனாளிகளுக்கு ரூ.15.95 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 2,500 பயனாளிகளுக்கு ரூ.29.15 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

புதுச்சேரி ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகம் மூலம் ஏழை மற்றும் மதிப்பெண்களில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளின் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டம், புகழ் பெற்ற பயிற்சி நிறுவனம் மூலம் இரண்டு மாத காலத்திற்குள் தொடங்கப்படும்.

கோடை உழவுக்கான நிதியுதவி

காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,500 வீதம் கோடை உழவுக்கான நிதியுதவி வழங்க வழங்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.13 கோடி செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் கன்றுகளுக்கு இலவச காப்பீடு

கன்றுக்கு ரூ.1,500 வீதம் 4 முதல் 8 மாத வயதுடைய அனைத்துப் பெண் கன்றுகளுக்கும் இலவச காப்பீடு வழங்கப்படும். கால்நடை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கால்நடை விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, புதுச்சேரி முழுவதும் மருத்துவ முகாம்கள் மற்றும் செல்லப் பிராணிகள் கண்காட்சிகள் நடத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி

பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் கல்விக் கற்பதை உறுதி செய்யும் பொருட்டு, அரசு பள்ளிகளில் நீட் மற்றும் ஜெஇஇ போன்ற போட்டி தேர்வுகளுக்காகப் பயிற்சி வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், குடிமைப் பணி, வங்கிப் பணி மற்றும் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யப்படும்.

அத்யாவசிய உணவுப் பொருட்கள் தொகுப்பு

புதுச்சேரி ஆட்சிப் பரப்பில் உள்ள மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொருட்டு, குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் அரிசியின் அளவை மாற்றியமைத்து, அரிசியுடன், கோதுமை மாவு, துவரம் பருப்பு, கேழ்வரகு மாவு, சர்க்கரை மற்றும் நெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தொகுப்பாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம்

நடப்பு நிதியாண்டில் புதியதாக 1,000 மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த முதியோர்களுக்கு "முதியோர் ஓய்வூதியம்" வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு மானியம்

பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (PMMSY) ரூ.1.60 கோடி மதிப்புடைய ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு பெண் மீனவ பயனாளிகளுக்கு 30 விழுக்காடு மானியமும், ஆண் மீனவ பயனாளிகளுக்கு 50 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் வாங்குவதற்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

ஏனாம் அரசு மருத்துவனையில் சிடி ஸ்கேனர்

கரிக்கலாம்பாக்கம், திருநள்ளார் சமுதாய நல மையம் மற்றும் காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார மையத்திற்கு இயன்முறை மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படும். மண்ணாடிப்பட் சமுதாய நல மையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 50mA திறனுடைய டிஜிட்டல் கதிரியக்கவியல் நிறுவப்படும். ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் சிடி ஸ்கேனர் அமைக்கப்படும்.

வக்ஃபு வாரியம் மூலம் கல்வி உதவித்தொகை

புதுச்சேரி வக்ஃபு வாரியம் மூலம் சுமார் 705 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில், அவ்வாரியத்திற்கு ரூ.21 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பயிற்சி பணி வாய்ப்பு

புதுச்சேரியில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் வகையில், இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு அமைப்பின் (CERT-In) வழிகாட்டுதல்களின்படி தகவல் தொழில்நுட்ப இயக்குநரகத்தில் பிரத்யேக இணையப் பாதுகாப்புப் பிரிவு (Cyber Security Division) நிறுவப்படும். இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களில் (IT & ITES) 150 மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகையுடன் 12 மாத காலத்திற்கு 'டிஜிட்டல் பயிற்சி பணிவாய்ப்பு' (Digital Internship Programme) வழங்கப்படும்.

நவீன மாவட்டச் சிறைச்சாலை

சிறை நிர்வாகத்தை நவீனப்படுத்தும் வகையில், முழு உடல் ஸ்கேனர்கள் (Full Body Scanners) மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட மேம்பட்டப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நவீன பாதுகாப்பு மற்றும் சீர்திருத்த வசதிகளுடன் கூடிய நவீன மாவட்டச் சிறைச்சாலை அமைக்கப்பட உள்ளது.

உலகத் தரத்திலான முதலமைச்சரின் முன்மாதிரி பள்ளிகள்

உலகத் தரத்திலான கல்வி உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வசதிகளுடன் புதுச்சேரியில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தலா ஒன்று என மொத்தம் 4 முதலமைச்சரின் முன்மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவச் சேவை

பயணம் செய்ய இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் இருப்பிடத்திலேயே மருத்துவ சேவைகள் வழங்கும் வகையில் 'நடமாடும் மருத்துவ சேவை' (Mobile Health Unit) அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நோய்த்தடுப்பு, ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை, இதய கண்காணிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

சமூக சேவை விருதுகள்

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றும் தனிநபர்கள், தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் புதுச்சேரி மாநில சமூக சேவை விருதுகள் வழங்கப்படும்.

ஹாக்கி, கால்பந்து மைதானங்கள்

'மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு நிதி' (SASCI) திட்டத்தின் கீழ் புதுச்சேரி, இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் ரூ.8.85 கோடி மதிப்பீட்டில் செயற்கை புல்தரை ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்.

காட்டேரிக்குப்பம், முருங்கப்பாக்கம் மற்றும் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் தலா ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும். மாகி, பந்தக்கல் I.K. குமரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் செயற்கை புல்தரை கால்பந்து மைதானம் அமைக்கப்படும்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம், அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். இதற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வால்வோ பேருந்துகள் இயக்கப்படும்

பாதுகாப்பான, வசதியான மற்றும் உயர்தரமான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கவும், அரசு-தனியார் பங்களிப்புடன் வால்வோ (VOLVO) பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். புதுச்சேரியிலிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் பிற முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படும்.

மாணவர்களுக்கு கையடக்க கணினி

நீட், ஜெஇஇ போன்ற தேசிய அளவிளான போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்கள் தங்களது கற்றல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கையடக்கக் கணினி (Tablet PC) இந்த நிதியாண்டு முதல் வழங்கப்படும். நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 16,250 மணவர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.16.25 கோடி செலவாகும்.

தியாகிகளின் ஓய்வூதியம் உயர்வு

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.6.46 கோடி செலவீனம் ஏற்படும்.

பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவி உயர்வு

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவி ரூ.35,000-லிருந்து ரூ.75,000 ஆகவும், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்களின் மகள் திருமணத்திற்கான நிதியுதவி ரூ.40,000-லிருந்து ரூ.1,00,000 ஆகவும், விதவையின் மறுமணத்திற்கான நிதியுதவி ரூ.75,000-லிருந்து ரூ.1,00,000 ஆகவும், ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கான திருமண நிதியுதவி ரூ.1,00,000-லிருந்து ரூ.1,25,000 ஆகவும், இந்த நிதியாண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும்.

பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுத்தொகுப்பு

புதுச்சேரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.3,000 மதிப்பிலான பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இதில் ஆடை, போர்வை, சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் நீதிமன்றம்

ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புதிதாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.