மக்களுக்கு குட் நியூஸ்..! இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!
திருவள்ளூர் ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ், இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது மேற்படி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.06.2026-லிருந்து 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2026- தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.
.